1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (13:33 IST)

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா: தொடங்கும் தேதி அறிவிப்பு!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா: தொடங்கும் தேதி அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் டிசம்பர் 30-ஆம் தேதி சர்வதேச திரைப்பட விழா தொடங்க உள்ளது என்றும் 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 120 ஒரு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இந்த நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு 500 ரூபாய் கட்டணம் என்றும் பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் https://icaf.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.