திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 டிசம்பர் 2023 (07:10 IST)

சென்னை எண்ணூர் தொழிற்சாலையில் அமோனியம் வாயு கசிவு.. பலருக்கு மூச்சுத் திணறல்..!

சென்னை எண்ணூர்  அருகே உள்ள ரசாயன தொழிற்சாலைகள் திடீரென அமோனியா வாயு கசிந்து உள்ளதை அடுத்து அந்த பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையிலிருந்து திடீரென அமோனியம் வாயு கசிந்ததால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஒரு சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் சிலருக்கு இருமல், மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறி வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்கு சென்று வருவதாகவும் அந்த பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  உடனடியாக அமோனியா வாயுகசிவை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva