1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (16:35 IST)

சென்னையில் இனி இரவில் மட்டுமே தூய்மைப்பணி: மாநகராட்சி அறிவிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் இரவு நேரங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள சாலைகளில்‌ போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்குகும்‌ பொருட்டு கூடுதல்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ மூலம்‌ இரவு நேரங்களில்‌ தூய்மைப்‌ பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 கோட்டங்களிலும்‌ திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பாக தினந்தோறும்‌ சுமார்‌ 5,000 மெட்ரிக்‌ டன்‌ குப்பைகள்‌ சேகரிக்கப்பட்டு அப்புறபடுத்தப்பட்டு வருகின்றது.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி மாண்புமிகு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அனைத்து பேருந்து சாலைகள்‌ மற்றும் உட்புறச்‌ சாலைகளிலும்‌ தூய்மை பணியினை தீவிரபடுத்த அறிவுறுத்தியுள்ளார்கள்‌.
 
பெருநகர சென்னை மாநகராட்‌ சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 38 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும்‌, 5,270 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள 34,640 உட்புற சாலைகளும்‌ உள்ளன. இந்த சாலைகளில்‌ மாநகராட்சியின்‌ சார்பில்‌ தூய்மை பணிகள்‌ நாள்தோறும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
மேலும்‌ மாநகரின்‌ 200 வார்டுகளிலும்‌ சேகரிக்கப்படும்‌ சுமார்‌ 5000 மெட்ரிக்‌ டன் அளவிலான குப்பைகள்‌ பல்வேறு வகையான வாகனங்களைக்‌ கொண்டு குப்பைகளை கையாளும்‌ மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சாலைகளில்‌ தூய்மைப்‌ பணிகள்‌ பகலில்‌ மேற்கொள்ளப்படும்‌ பொழுதும்‌, குப்பைகள்‌ அகற்றப்படும்‌ பொழுதும்‌ பேருந்து மற்றும்‌ உட்புற சாலைகளில்‌ பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறுகள்‌ ஏற்படுகின்றன.
 
இதனை கருத்தில்‌ கொண்டு பேருந்து சாலைகளிலும்‌, உட்புற சாலைகளிலும்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ தூய்மை பணி மேற்கொள்ளும்‌ தனியார்‌ நிறுவனங்களின்‌ சார்பில்‌ இரவு நேரங்களில்‌ தூய்மை பணிகள்‌ தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
 
தற்பொழுது தூய்மை பணிகள்‌ மேற்கொள்ளும்‌ பொழுது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ வண்ணம்‌ மாநகராட்சியின்‌ திடக்கழிவு மேலாண்மை துறையின்‌ மூலம்‌ பேட்டரியால்‌ இயங்கும்‌ 255 வாகனங்கள்‌, 53 மூன்று சக்கர வாகனங்கள்‌, 147 கம்பாக்டர்‌ வாகனங்கள்‌, 50 மெக்கானிக்கல்‌ ஸ்வீப்பர்‌ வாகனங்கள்‌, 23 டிப்பர்‌ லாரிகளும்‌ மற்றும்‌ 1786. தூய்மைப்‌ பணியாளர்களும்‌ பலசியமர்த்தப்பட்டு பணிகள்‌ முடுக்கிவிடப்பட்டுள்ளன.
 
எனவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள சாலைகளில்‌ கூடுதல்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ பணியாளர்களை கொண்டு அனைத்து தூய்மை பணிகளையும்‌ இரவு நேரங்களிலேயே முடித்து பொதுமக்களின்‌ போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.