1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (11:21 IST)

கொரோனாவின் தீவிரத்தை பொறுத்து சென்னையில் கட்டுப்பாடுகள்??

சென்னையில் கொரோனாவின் தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டி.

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து கோவை உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருப்பூரில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. 
 
இதனிடையே  அடுத்து சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் கொரோனா தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.