புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2020 (07:56 IST)

அடுத்த ஆண்டு தீபாவளி கொண்டாடிக் கொள்ளலாம்: பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

பண்டிகை காலங்களில் அனைத்து பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வந்து உடை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் தன்மை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கடைக்கு செல்வதை நோய் எதிர்ப்பு தன்மையை கருத்தில் கொண்டு ஒரு ஆண்டுக்கு தள்ளிப் போடுவதால் தவறில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்கான பொதுமக்கள் பெருமளவில் வீட்டை விட்டு வெளியே வந்து உடைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கும்போது தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடாமல் இருந்தால் ஒன்றும் தவறு இல்லை என்றும் ஏற்கனவே சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் தற்போது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது கொரோனாவையும் மீறி மக்கள் பண்டிகையை கொண்டாட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது