மோரிஸுடன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட பாண்ட்யா – எச்சரித்த நடுவர்கள்!

Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (17:27 IST)

நேற்று நடந்த 48 ஆவது ஐபிஎல் போட்டியில் ஸ்லெட்ஜிங்குகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ்வின் சிறப்பான பேட்டிங்கால் மும்பை வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் கோலியும் சூர்யக்குமார் யாதவ்வும் களத்திலேயே மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல ஆர் சி பி பவுலர் கிறிஸ் மோரிஸும் ஹர்திக் பாண்ட்யாவும் காரசாரமாக பேசிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து விதிகளை மீறியதற்காக இருவரும் எச்சரிக்கப்பட்டனர்.
இதில் மேலும் படிக்கவும் :