சூர்யக்குமார் யாதவ்வை முறைத்த கோலி – கழுவி ஊற்றும் நெட்டிசன்!

Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (17:28 IST)

ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யக்குமார் யாதவ்வை முறைத்துப் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ்வின் சிறப்பான பேட்டிங்கால் மும்பை வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் கோலி சிறப்பாக ஆடிக் கொண்டு இருந்த சூர்யகுமாரை நோக்கி சென்று முறைத்துப் பார்த்து ஸ்லெட்ஜிங் செய்தார். இது ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் போட்டி முடிந்த இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கோலி இதுபோல ஒரு இளம் வீரரிடம் நடந்து கொள்ளலாமா எனக் கோலிக்கு எதிராய் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.



இதில் மேலும் படிக்கவும் :