1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2020 (19:31 IST)

தீபாவளி போட்டியில் இணைந்த சுந்தர் சி திரைப்படம்!

தீபாவளி என்றாலே புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் என்பதும் ரசிகர்கள் அந்த திரைப்படத்தை பார்க்க குவிந்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஒருவேளை தீபாவளிக்குள் திரையரங்குகள் திறந்தாலும் புதிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஓடிடியில் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்கள் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளன 
 
இந்த நிலையில் தற்போது சுந்தர் சி தயாரிப்பில் உருவாகியுள்ள ’நாங்க ரொம்ப பிஸி’ என்ற திரைப்படம் தீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை சுந்தர் சி யின் உதவி இயக்குனர் பத்ரி இயற்றியுள்ளார்
 
சன்டிவிக்காகவே உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்