1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis india wide

இந்தியாவில் 3.20 லட்சம் பேருக்கு கொரோனா! – மாநிலவாரி நிலவரம்

India
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளத நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 9,195 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,04,568 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,830 பேர் பலியான நிலையில் 49,346 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 42,687 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 23,038 பேரும், டெல்லியில் 38,958 பேரும், ராஜஸ்தானில் 12,401 பேரும், மத்திய பிரதேசத்தில் 10,641 பேரும், உத்தர பிரதேசத்தில் 13,118 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஒருவர் மரணத்துக்காக 19 பேரை பலி கொண்ட போராட்டம்! – உலகம் முழுவதும் பரவும் போராட்டம்!