லாரி மோதி கல்லூரி மாணவர் பலி! - சென்னையில் சோகம்!
சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 18 வயதான முகமது சதக்கத்துல்லா புதுக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். சென்னை எழும்பூர் அருகே காந்தி இர்வின் சாலையில் முகமது தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது பைக் மோதியதில் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.