செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2022 (08:23 IST)

சென்னையில் நள்ளிரவில் கொட்டிய கனமழை: முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரப்பாக்கம் ஏரி

Chembarappakkam
சென்னையில் நேற்று பகலில் அதிக மழை இல்லை என்றாலும் திடீரென இரவில் பெய்த கன மழை காரணமாக சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்ததாகவும் அதன் காரணமாக சென்னையின் நீர் ஆதாரங்களான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் அளவான 24 அடியில் தற்போது 21 அடியை எட்டி விட்டது என்றும் கனமழை காரணமாக வினாடிக்கு 642 களரணி அணைக்கு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சென்னையில் மழை பெய்தால் செம்பரபாக்கம் ஏரி தனது முழு நீர்மட்ட அளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
செம்பரப்பாக்கம் ஏரி மட்டுமின்றி மற்ற ஏரிகளும் மிக வேகமாக நிரம்பி வருவதாக கூறப்படுவதால் இந்த ஆண்டு சென்னை நீர் தட்டுப்பாடு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva