வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2023 (09:09 IST)

சாலை துண்டிக்கப்பட்டதால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்தம்!

கோப்பு படம்

நேற்று முழுவதும் சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை முழுவதும் வெள்ள நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. அவற்றை அகற்றும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கோ அல்லது புதுச்சேரியில் இருந்து சென்னைக்கோ பேருந்துகள் இயக்கப்படவில்லை.