வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (16:23 IST)

பதவி நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா திடீரென முதல்வருடன் சந்திப்பு: புதுவையில் பரபரப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று மாலை திடீரென புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன

 புதுவையில்  பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா இருந்த நிலையில் திடீரென அவரை நீக்குமாறு ஆளுநருக்கு முதல்வர் ரங்கசாமி கடந்த சில வாரங்களுக்கு முன் பரிந்துரை கடிதம் அனுப்பினார். இதனை அடுத்து சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது பதவி நீக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று முதல்வர் ரங்கசாமி வீட்டில் அவரை சந்தித்து பேசினார். இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியில் இன்னும் வரவில்லை.

சந்திர பிரியங்கா பதவி நீக்கப்பட்ட பிறகு அவரது துறைக்கு புதிய அமைச்சர் யாரும் இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதால் மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்த நிலையில் பிரியங்கா பிரியங்கா சமீபத்தில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்தும் முதல்வரிடம் அவர் பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran