ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (16:29 IST)

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னையை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போட்டி ஒன்றுக்காக சென்றிருந்து அங்கே பீட்சா, பர்கர் சாப்பிட்ட நிலையில், அவர் சென்னை திரும்பியவுடன் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேசத்தில் நடந்த நிலையில், கோவையிலிருந்து தனியார் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள் அதில் பங்கேற்றுள்ளனர். 
 
போட்டி கடந்த 15ஆம் தேதி முடிவடைந்த நிலையில், ரயில் மூலம் அவர்கள் தமிழகத்திற்கு திரும்பி வந்த நிலையில், எலினா லாரேட் என்ற 15 வயது மாணவி திடீரென உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே, அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ரயிலில் வரும்போது அவர் பர்கர், பீட்சா, சிக்கன் பிரைடு ரைஸ் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும், அதனால்தான் அவருக்கு உடல்நல உபாதைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கை பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran