நிவர் புயல் எதிரொலி: சென்னை, மதுரை ஐகோர்ட்டுகள் விடுமுறை!

Madurai court
நிவர் புயல் எதிரொலி: சென்னை, மதுரை ஐகோர்ட்டுகள் விடுமுறை!
siva| Last Updated: புதன், 25 நவம்பர் 2020 (09:01 IST)
நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

வங்க கடலில் உருவான புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசு, இன்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே

அதுமட்டுமன்றி பேருந்தும் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது

இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளை ஆகிய இரண்டு நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவேண்டிய வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :