வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (06:41 IST)

நிவர் புயல் தற்போது எங்கே உள்ளது?

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்த நிவர் புயல் கடந்த சற்று முன்பு வெளியான தகவலின் படி சென்னையில் இருந்து 310 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
வங்க கடலில் உருவாகிய நிவர் புயல் தீவிர புயலாக உருவெடுத்து தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருவதாகவும் அடுத்த ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
நிவர் புயல் கரையை கடக்கும்போது 130 முதல் 140 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் அதனால் சென்னை மற்றும் கடலூர் இடையே உள்ள கடலோர பகுதிகளில் சேதங்கள் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசு ஏற்கனவே மீட்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர்களை தயார் நிலையில் வைத்திருப்பதால் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது