22 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்!
24 அடியில் 22 அடியை எட்டியதால் செம்பரம்பாக்கம் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியாகும்.
இதனிடையே தற்போது நிவர் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி அருகே அதிதீவிவ புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இந்நிலையில் தற்போது மழையின் காரணமாக 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம். ஏற்கனவே மழை பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் 24 அடியில் 22 அடியை எட்டியதால் செம்பரம்பாக்கம் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.