Daily Horoscope
✕

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு: விமானங்கள் புறப்படுவதில் சிக்கல்..!

Written By Mahendran
Updated: புதன், 4 அக்டோபர் 2023 (12:04 IST)
சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும், அதிகாலை விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதி அடைந்ததாகவும் தெரிகிறது.
 
துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி,  லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும், அதேபோல் அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக கிளம்பியதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ராஜஸ்தான் பஞ்சாயத்து தேர்தல்.. காங்கிரஸ் அபார வெற்றி.. பாஜகவின் பின்னடைவு எதை காட்டுகிறது?

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்.. சிஆர்பிஎஃப் படைகளை பயன்படுத்துங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு..

வருகிற 23ம் தேதி திருச்சி செல்லும் முதல்வர் விஜய்?.. பின்னணி என்ன?..

கேரளா ஜடாயு பூமி மையத்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. பிரதமரும் ஆவல்.. ராமாயணா திரைப்படம் தான் காரணமா?

பினாமி பெயர்களில் குவாரிகள்!.. மூர்த்தி வீட்டில் சோதனை நடப்பதன் பின்னணி?...

அடுத்த கட்டுரையில்
Show comments