1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (09:26 IST)

ஏசி இயங்கவில்லை.. அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்! வாக்குவாதத்தால் பரபரப்பு..!

ரயிலில் ஏசி இயங்காததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை பயணிகள் நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஹூப்ளி - கொச்சுவேலி விரைவு ரயிலின் ஏ1 பெட்டியில் திடீரென ஏசி இயங்காததை அடுத்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினார். 
இதனை அடுத்து அவர்கள் திடீரென அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து போத்தனூர் ரயில் நிலையத்தில் ஏசி கோளாறு சரி செய்யப்பட்டு அதன் பின் ரயில் இயக்கப்பட்டது. 
 
ஏசி இயங்காததால் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயில் பயணிகள் ரயிலை நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Siva