1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (20:59 IST)

காவல்துறை பெண் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர் !

காவல்துறை பெண் ஆய்வாளர் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர்

செங்கல்பட்டு மாவட்டம் ஆய்வாளர் மீது ஜிம் மாஸ்டர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்துள்ள தாழம்பூர்  காவல்நிலையம்  உள்ளிட்ட மேலகோட்டையூர்  காவலர் குடியிருப்பு பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
 
அங்குள்ள  குடியிருப்பில் வசித்து வருபவர் ஜிம் மாஸ்டர் வெங்கடேஷ். இவரும் தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
 
காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்திற்கும், வெங்கடேஷுக்கும் பிரச்சனை இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஜெயந்தியை  ஜிம் மாஸ்டர்  தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.