1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (20:02 IST)

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்: சத்தியபாமா பல்கலை அறிவிப்பு!

yuvan
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக சத்யபாமா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 31வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, பிரபல விஞ்ஞானி டாக்டர் வி பாலகுரு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
 
16 வயது முதல் இசைப்பணியை தொடங்கி 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனை செய்த யுவன்சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது