வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (08:29 IST)

தேசிய கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை: என்ன காரணம்?

தேசிய கபடி வீராங்கனை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை மாங்காடு என்ற பகுதியைச் சேர்ந்த பானுமதி என்பவர் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளார் என்பதும் இவர் நேற்று மாலை திடீரென தனது அறையில் தூக்கு போட்டு துவங்கியதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இதுகுறித்து போலீசார் முதல் கட்டமாக விசாரணை செய்தபோது கடந்த சில ஆண்டுகளாகவே பானுமதிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்றும் வேலை கிடைக்காத விரக்தியில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் அவரது செல்போன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.