1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை: செங்கல்பட்டு அருகே பரிதாபம்!

வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை: செங்கல்பட்டு அருகே பரிதாபம்!
வேலை கிடைக்காத விரக்தியில் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
செங்கல்பட்டு அருகே வள்ளலார் நகர் என்ற பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் அவ்வப்போது திடீர் திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது
 
சரியான வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்த முருகன் நேற்று விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் 
 
உடனடியாக அவரை அவருடைய உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.