செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (13:14 IST)

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள கண்ணனூரைச் சேர்ந்த ராஜா மற்றும் வாடிபட்டி அருகே குட்லாடம்பட்டி - பூச்சம்பட்டியைச் சேர்ந்த வள்ளிக்கும் தனித்தனி குடும்பம் உள்ளது.
 
இருவருக்கும் ஏற்பட்ட கள்ள தொடர்பால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி செக்காணூரணி பசும்பொன் நகரில் கள்ளத்தனமாக இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வாழ்ந்து வந்துள்ளனர்.
 
வள்ளி சித்தாள் வேலைக்கும், ராஜா டீ கடைக்கும் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்த சூழலில், சித்தாள் வேலைக்கு சென்ற வள்ளிக்கும், கீழப்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்ற கொத்தனாருக்கும் கள்ள உறவு ஏற்பட்டு ராஜா இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று இரவு நேர பணிக்காக டீக்கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டு இன்று பகலில் வீடு திரும்பிய ராஜா, வீட்டினுள் கொத்தனார் செல்வம் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் முகம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள காயங்களின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் உடலை மீட்டு உடற் கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும் இரவு வீட்டில் இருந்த வள்ளி எங்கு சென்றார் என தெரியாத சூழலில் மாயமான வள்ளியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
 
கள்ள தொடர்பு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் மேலும் ஒரு கள்ள தொடர்பில் இருந்ததும், அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவமும் செக்காணூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.