ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (16:32 IST)

எம்எல்ஏ இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆ.கொக்குளம் கிராமத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் இல்ல திறப்பு விழா இன்று நடைபெற்றது.
 
இந்த திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்றனர்.
 
விழாவிற்கு வந்த ஒபிஎஸ், டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்., இல்ல திறப்பு விழாவில் ஒபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்தினர்.
 
தொடர்ந்து இருவருக்கும் மீனாட்சியம்மன் சிலைகள் பரிசாக வழங்கப்பட்டது., டிடிவி தினகரனுக்கு எம்எல்ஏ சார்பில் ஒபிஎஸ் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.