ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு: பெண் வேட்பாளரை களமிறக்கிய சீமான்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக உள்பட பெரிய கட்சிகள் அனைத்தும் புறக்கணித்த நிலையில் திமுக என்ற ஒரு பெரிய கட்சி மட்டுமே போட்டியிடுவதால் அந்த கட்சியின் வெற்றியை உறுதி ஆகிவிட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் திமுக-வை எதி போட்டியிடுவோம் என ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த நிலையில் இன்று அவர் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி என்பவர் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் திமுக சார்பில் ஏற்கனவே வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக, தேமுதிக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு வரும் நிலையில் இந்த தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரையும் அறிவித்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Edited by Siva