15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தமிழகத்தில் பாஜக நிர்வாகி கைது..!
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம் எஸ் ஷா என்பவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பாஜக நிர்வாகி எம் எஸ் ஷா என்பவர் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை திருமங்கலம் பகுதியில் தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வரும் எம்.எஸ். ஷா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் புகார் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ்களையும் இவர் அனுப்பி உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில் இன்று அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran