வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (14:40 IST)

தமிழத்தில் அக்., 29 ,30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

Rain
இந்தியாவில்  தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதான வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
 

இந்த நிலையில்,  தமிழத்தில் வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 29 ஆம் தேதி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், ஆகிய  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 30 ஆம் தேதி தஞ்சாவூர்,  திருவாரூர்,  நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,திருச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம் , நாமக்கல்,விருது நகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.