செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By VM
Last Updated : செவ்வாய், 18 டிசம்பர் 2018 (12:14 IST)

அலுவலகத்தில் வைத்து சீரழித்தார்: ஹார்வி வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் புகார்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி புகார்  கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நடிகை ஜேன் டோ, ஹார்வி வெயின்ஸ்டீன் வலுக்கட்டாயமாக தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து வெளியே சொன்னால் தனது சினிமா வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று ஹார்வி தன்னை மிரட்டினார் என்றும்  தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது அலுவலகத்தில் வைத்தும் தரையில் தள்ளி  தன்னை வன்கொடுமை செய்ததாகவும் அந்த நடிகை கூறியுள்ளார். 
 
இதற்கிடையில் வாய்ப்பு கேட்கும் தங்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹார்வி மீது 70க்கும் மேற்பட்ட பெண்கள்  புகார் கொடுத்துள்ளனர்.