1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (20:08 IST)

லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது எப்படி ? சிசிடிவி காட்சிகள் வெளியானது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் யாராக இருக்கும் என போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
காவல் துறையினர் ஆய்வு நடத்தியதில், கடையின் பின்புறமுள்ள புனித ஜோசப் பள்ளிக்கும் கடைக்கும் இடையே ஒரே சுவர் என்பதால் பள்ளியின் வழியே பக்கவாட்டு சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். 
 
இரவுப் பணியில் இருந்த 6 காவலாளிகளும் கடையின் முன்பக்கம் இருந்ததால் அவர்களுக்கு கடையின் பின்புற என்ன நடக்கிறது என்பது தெரிய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. மிகவும் கேஸ்வலாக பொம்மை முகமூடி அணிந்து 2 பேர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது. தற்போது அவர்களைப் பிடித்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையர்கள் திருடும் வீடியோ வெளியாகியுள்ளது.அதில், சுவற்றைக் துளையிட்ட இரு கொள்ளையர்கள் , கடையினுள்  நுழைந்து, கண்ணாடிக்குள்  அடுக்கி வைத்திருந்த நகைகளை வேகவேகமாக எடுத்து கொண்டு வந்த பையில் போட்டு நிரப்புகின்றனர். உள்ளே ஒரு நகையும் விட்டுவைக்காமல் அத்தனை நகைகளையும் வழித்து எடுத்து பையில் நிரப்புகின்றனர். இதைப்பார்க்கும் போது இவர்கள் ஏற்கனவே பல கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்ததாக தகவல் வெளியானது. தங்களது முகம் தெரியக்கூடாது என்பதற்க்காக முகத்தை மறைக்க முகமூடி மற்றும் உடல் முழுவதும் தெரியாத வகையில் ஆடை உடுத்தியிருந்தனர்.
 
இரு திருடர்களும் உள்ளே வந்த துவாரத்தின் வழியே நகையுள்ள பைகளை வெளியே அனுப்பி உள்ளனர். அதனால் இது ஒரு கும்பலாக சேர்ந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மோப்ப நாய் மோப்பம் பிடிக்கக் கூடாது என அந்த இடங்களைச் சுற்றி மிளகாய்  பொடிகளை தூவிட்டுள்ளனர். 
 
இப்படியாக இந்த வீடியோ உள்ளது. தற்போது பிடித்துள்ளவர்களிடம், போலீஸார் விசாரணை மேற்கொள்ள வருகின்றனர். அதனால் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல் வெளிவரும் என தகவல்கள் வெளியாகிறது.