வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 8 மே 2024 (07:41 IST)

தமிழ்நாட்டில் இருந்து ரஷ்யாவிற்கு ஆள் கடத்தல்: 4 பேர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

cbi6
தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்திவந்த கும்பலை சேர்ந்த 4 பேரை சி.பி.ஐ கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கன்னியாகுமரியை சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையை சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவை சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேர்  சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை கடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.
 
கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த நிஜில் ஜோபி, ரஷ்யாவில் இருந்தபடி கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து சிபிஐ விசாரணை செய்தது.
 
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சென்னை உட்பட 7 நகரங்களில் சோதனை நடத்திய நிலையி தற்போது மும்பையை சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவை சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேர்  கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
 
Edited by Siva