ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (11:56 IST)

அமேதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்: வயநாடு சிபிஐ வேட்பாளர் ஆனிராஜா

கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜா போட்டியிடுகிறார் என்பதும் இருவரும் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர் என்பதும் தெரிந்தது.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்கும் நிலையில் இருவரும் நேருக்கு நேர் ஒரே தொகுதியில் மோதிக் கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ராகுல் காந்திக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தியது இந்தியா கூட்டணியின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வைத்தது.

இந்த நிலையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை பொருத்தவரை எதிர் வேட்பாளர் என்றாலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட்டால் கூட்டணி கட்சி என்ற முறையில் அவருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வேன் என்று வயநாடு தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவ்வாறு போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடும் ஒரு வேட்பாளரே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் என்பது இதுவரை தேர்தல் வரலாற்றில் காணாத புதுமையாக கருதப்படுகிறது.

Edited by Siva