1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (12:11 IST)

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது: அமைச்சர் துரைமுருகன்

காவிரி நீர் பிரச்சனை தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு இடையே  உச்சத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பாக இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழகத்திற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பந்த் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பந்த் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது: கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது, கர்நாடகா திறந்துவிடும் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை, கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளது, ஆனாலும் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது.
 
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் எங்கள் கோரிக்கையை முன்வைப்போம், இரு மாநிலங்களும் ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
 
Edited by Mahendran