ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (20:43 IST)

நடிகர் சித்தார்த்திற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு...

Siddharth
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் சித்தார்த். இவர் நடித்து தயாரித்துள்ள படம் சித்தா. இப்படத்தை  பண்ணையாரும் பத்மினிரும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார்.
 

இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார். இது, அண்ணன் மகளுக்கும் ஹீரோவுக்குமான அன்புருவான கதை. இப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த நிலையில்,  இப்படத்தை பிரபல நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.

இன்று, கர்நாடக மாநிலம், பெங்களூரில்  இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரமோசன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சித்தார்த்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சித்தார்த் மேடையில் இருந்து வெளியேறினார். பின்னர் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகிறது.