திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (10:33 IST)

மூதாட்டியின் உடலை கடித்து தின்ற பூனை: மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமா?

கோவை மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் உடலை பூனை கடித்து தின்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மூதாட்டி நேற்றிரவு மரணம் அடைந்தார். அவரது உடலை யாரும் வாங்க வராததால் மருத்துவமனை ஊழியர்கள் பிணவறையில் பாதுகாத்து வைக்காமல், வார்டிலேயே வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு பூனை அந்த மூதாட்டியின் உடலை கடித்து தின்ற அதிர்ச்சி காட்சியை கண்ட சில இளைஞர்கள் இதுகுறித்து மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் சிகிச்சை அளிப்பது மட்டுமே தங்களுடைய வேலை என்றும், பிணத்தை பாதுகாக்கும் பணி எங்களுடையது இல்லை என்றும் ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் மூதாட்டியின் பிணத்தை எலி கடித்து தின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து மூதாட்டியின் உடல் பிணவரைக்கு கொண்டு செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்த மூதாட்டியின் உடலை பூனை கடிக்கவில்லை என்றும், இறந்தவரின் உடலை பூனை கடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு என்றும் மருத்துவமனையின் டீன் அகோகன் விளக்கம் அளித்துள்ளார்.