வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (11:47 IST)

என்ன பண்ணுனாலும் கூட்டணி இல்லைன்னு தெளிவா சொல்லிட்டேன்..! – பாஜகவுக்கு எடப்பாடியார் பதில்!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எடுத்த முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார்.



பாஜக மாநில தலைமைக்கும் அதிமுகவிற்கும் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நடந்து வந்த நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அதிமுக அறிவித்தது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்த பிற கட்சிகளும் சிதறும் அபாயம் எழுந்துள்ளது.

இதனால் பாஜக தலைமை அண்ணாமலையை டெல்லிக்கு வரவழைத்து பேசிய நிலையில், அதிமுகவை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் பேசிய பாஜக தமிழக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுகவை கூட்டணியில் இணைக்க முயன்று வருவதாக பேசியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன். 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவை அதிமுக எடுத்துள்ளது. இதில் மாற்றம் கிடையாது” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K