புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:59 IST)

அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமரா… பொது நல வழக்கு!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கள்ளச்சந்தையில் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 32 ஆயிரத்து 722 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் மக்களின் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, ஜீனி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை விநியோகிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைகள் பயன்பெறுகின்றன.

இந்நிலையில் இவ்வாறு அரசால் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு முழுவதுமாக சென்று சேர்வதில்லை எனவும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைத் தடுக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என சிரில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.