வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:22 IST)

சேரனை அவமானப்படுத்தியதா சன் நெக்ஸ்ட்… பாண்டவர் பூமியால் வந்த வினை!

இயக்குனர் சேரன் பெயரை குறிப்பிடாமல் சன் நெக்ஸ்ட் ஒரு பதிவைப் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேரன் இயக்கிய படங்களில் பாண்டவர் பூமி திரைப்படம் குடும்ப ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதனால் அதை அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தார்கள். இந்நிலையில் இப்போது அந்த படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆனதை அடுத்து சன் நெக்ஸ்ட் தொலைக்காட்சி அதைக் கொண்டாடும் விதமாக அந்த படத்தின் போஸ்டரை வெளிட்டது. அதில் அந்த படத்தில் நடித்தவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் படத்தின் இயக்குனர் சேரனின் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி அதில் இயக்குனர் சேரனை டேக் செய்தார். அதற்கு பதிலளித்த சேரன் ‘உங்களது பாராட்டுக்கும் அன்பிற்கும் பெருமகிழ்ச்சி.. @SunTV @sunnxt எனது ஒரே வேண்டுகோள்.. திரைப்படங்கள் பற்றிய பதிவுகளில் அந்த திரைப்படத்தின் இயக்குனரின் பெயரை (tag) இணைக்கவும்.. இயக்குனருக்கான அங்கீகாரமும் அடையாளமும் இங்குதான் கொடுக்கப்படவேண்டும். நன்றி.’ எனத் தெரிவித்துள்ளார்.