திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (12:55 IST)

புற்று நோய் சிகிச்சைக்கு பின் ஆளே மாறிப் போன சஞ்சய் தத்… வெளியான முதல் புகைப்படம்!

நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகி இப்போது அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகர் சஞ்சய் தத் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் வரிசையாக படங்களை நடித்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கே ஜி எப் படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரது போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோன ரேபிட் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் ஒருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மீண்டும் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்திப் போய் காணப்படுகிறார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அவர் சீக்கிரமே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் எனப் பிராத்தித்து வருகின்றனர்.