திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (11:43 IST)

இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் பேச்சு.. பா ரஞ்சித் உதவியாளர் மீது வழக்கு..!

இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பா ரஞ்சித்தின் உதவியாளர் விடுதலை சிகப்பி என்பவர் மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலை சிகப்பி, இந்து கடவுள்களான ராமர் சீதை லட்சுமணன் அனுமன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். 
 
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பு மீது கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துதல் உள்பட 5 பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
விடுதலை சிகப்பி இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran