திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (17:12 IST)

கடைக்குள் புகுந்த கார் ! ஓட்டுநருக்கு ’தர்ம அடி’ கொடுத்த மக்கள் - வைரல் வீடியோ

திருப்பூரில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பல்லடம் மகா லட்சுமி நகர் வழியே அதிவேகத்தில் செல்லும் போது, எதிரில் ஒரு பள்ளி வாகனம் வருவதைக் கண்ட ஓட்டுநர் தனது காரை சடாரென நிறுத்தினார். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மீது மோதி.அங்கு பேக்கரிக்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் காரை ஓட்டி வந்தவரை ’நன்றாக கவனித்தனர். ’
திருப்பூரில் இருந்து கோவை வழியாக  கார் ஒன்று பல்லடம் சாலையில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அந்த சாலையின் எதிரே ஒரு மஞ்சள்  நிற பள்ளி வாகனம்  நின்று திரும்புவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
 
அந்த பள்ளி வாகனம் மீது மோதாமல் இருக்க வேண்டுமென்பதற்காக சடனாக பிரேக் போட்டார் கார் ஓட்டுநர். ஆனால் சாலையைக் கடந்து பள்ளி வாகனத்துக்குப் பின்னால் நின்றிருந்த பைக் ஒன்றின் மீது மோதி, பின்னர் சாலை ஓரத்தில் இருந்த பேக்கரிக்குள்  புகுந்தது.
 
இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய ஓட்டுநரை அங்கிருந்த மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர்.
 
அந்த ஓட்டுநரைப் பிடித்த மக்கள் அவரிடம் விசாரித்தனர். அவர் : தனது பெயர் சூர்ய பிரகாஷ், குங்குமப்பாளையத்தில் உள்ள கார் விற்பனைப் பிரிவில் பணிபுரிவதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீஸார் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னரே ஓட்டுநர் தப்பிச்சென்றுவிட்டார்.இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.