செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (15:37 IST)

சூறைக்காற்றில் பேருந்து மேற்கூரை பறந்தது – அச்சமூட்டும் நிகழ்வு !

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இந்த காற்றால் பொள்ளாச்சி அருகே ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் வடக்குப் பாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது பலமானக் காற்று வீசியதால் பேருந்தின் மேற்கூரை தனியாகப் பறந்து சென்றது.

இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பஸ்ஸின் மேற்கூரை பழுது பட்டு ஆங்காங்கே பெயர்ந்து இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து பேருந்தை சரிசெய்ய பொள்ளாச்சிக் கொண்டுசென்றனர்.