வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 26 ஜனவரி 2019 (13:20 IST)

ஷாக்கிங் சர்ப்ரைஸ்: குடியரசு தின வாழ்த்துக்களை வீடியோவாக வெளியிட்ட கேப்டன்

நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும்  70 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வெளியிட்டுள்ள வீடியோவில் அமைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். லஞ்சம் இல்லாத ஆட்சி. யாருக்கும் அஞ்சாத நீதி. நேர்மையான தேர்தல். மக்களோடு இணைந்து உருவாக்குவோம். முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என பேசியுள்ளார்.

ஒருபக்கம் கேப்டனுக்கு பலர் குடியரசு தின வாழ்த்துக்களை கூறி வந்தாலும் பலர் விரையில் மீண்டு வாருங்கள் என கூறி வருகின்றனர்.