குடியரசு தின விழா - தமிழக ஆளுநர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் 70 வது குடியரசு தினவிழாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சார்பாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காந்தி சிலை மற்றும் காமராஜர் சிலை அருகே குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சற்று நேரத்திற்கு முன்னர் சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏக்கள், மற்றும் அமைச்சர்கள் பங்குபெற்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் லட்சக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.