வியாழன், 12 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஜனவரி 2026 (11:33 IST)

5 கொலை செய்த காதலர்.. 1 கொலை செய்த காதலி.. பரோல் பெற்று இன்று திருமணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

5 கொலை செய்த காதலர்.. 1 கொலை செய்த காதலி.. பரோல் பெற்று இன்று திருமணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
திரைப்படக் கதையையே மிஞ்சும் வகையில், சிறைச்சாலையில் பூத்த ஒரு காதல் தற்போது திருமணத்தில் முடிய உள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் சிறையில் தண்டனை பெற்று வரும் இரண்டு கொலை குற்றவாளிகள், தங்களின் திருமணத்திற்காக 15 நாட்கள் அவசரக்கால பரோல் பெற்றுள்ளனர். டேட்டிங் ஆப் மூலம் பழகிய இளைஞரை கடத்திக் கொலை செய்த மாடல் பிரியா சேத் மற்றும் ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்த அனுமன் பிரசாத் ஆகிய இருவருமே அந்த மணமக்கள்.
 
பிரியா சேத், கடந்த 2018-ஆம் ஆண்டு டிண்டர் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவரை தொடர்பு கொண்டு, தனது காதலனுடன் சேர்ந்து அவரை கடத்தி ரூ. 10 லட்சம் மிரட்டி பறிக்க முயன்றார். அடையாளம் தெரிந்துவிடும் என்ற பயத்தில், துஷ்யந்தை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து மலைப்பகுதியில் வீசினார். இதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
அதேபோல், அனுமன் பிரசாத் தனது காதலியின் பேச்சை கேட்டு, அவளுடைய கணவன் மற்றும் நான்கு குழந்தைகளை ஒரே இரவில் கொடூரமாக கொலை செய்தவர். இந்த இருவருமே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சங்கனேர் திறந்தவெளி சிறையில் சந்தித்து காதலித்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆல்வாரின் பரோடமேவ் பகுதியில் இவர்களது திருமணம் இன்று நடைபெற உள்ளது. இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva