திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (13:41 IST)

நாங்க இல்லாம ஆட்சியமைக்க முடியாது! – எச்சரிக்கை விடுக்கும் எச்.ராஜா!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என எச்.ராஜா பேசியுள்ளார்.

முன்னதாக விநாயகர் சதுர்த்திக்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எச்.ராஜா பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் முற்று பெற்ற நிலையில் மீண்டும் எச்.ராஜா அதிமுக குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”பாஜக கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சியமைக்க முடியாது. அதிமுக எல்லை மீறி நடக்கக்கூடாது. அமைச்சர் செல்லூர் ராஜூவும், அமைச்சர் ஜெயக்குமாரும் பேசுவது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார். பாஜகவினர் மீது சமீப காலங்களில் ஏற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுப்பதை குறித்து மறைமுகமாக எச்.ராஜா பேசுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.