1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Calculator Allowed for the First Time in Plus Two Accountancy Exam

பிளஸ் 2 தேர்வு: முதல்முறையாக மாணவர்களுக்கு கால்குலேட்டர் அனுமதி..!

கணக்குப்பதிவியல்
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், கணக்குப்பதிவியல் (Accountancy) பாடத்துக்கு தேர்வு அறையில் முதல் முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
 
சென்னை தலைமை செயலகத்தில் இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் பாடம் எழுதும் மாணவர்கள், கணக்கீடுகளை செய்ய முதன்முறையாக கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். இது இப்பாட மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
"மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுத வேண்டும். இது மாணவர்களுக்கான தேர்வு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கான தேர்வும் கூட. மகிழ்ச்சியாக தேர்வுக்கு தயாராகுங்கள்," என்று அவர் அறிவுறுத்தினார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
கோவை வன்கொடுமை! தாமதமாக கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்