திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (16:10 IST)

சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.2 000 கோடி சொத்துகள் முடக்கம் ! வருமான வரித்துறை நடவடிக்கை

ஏற்கனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் டிடிவி தினகரனின் உறவினருமான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது பெங்களூர் அக்ரகார சிறையில் கைதியாக உள்ளார். சமீபத்தில் சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.  
 
இந்நிலையில் பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் இன்று சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை ஒட்டியது வருமான வரித்துறை. 
 
 
இந்நிலையில், சசிகலா, இளவரசி , சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
 
இதனால் சசிகலா மற்றும் டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.