புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (09:04 IST)

நீங்கல்லாம் வரக்கூடாது - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சி வி சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு !

பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து டெல்லிக்கு சென்ற சி வி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதிய மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்த மோடி ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி ஜூன் 19ஆம் தேதியன்று ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அது சம்மந்தமான அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

இதில் கலந்துகொள்வதற்காக அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் டெல்லி சென்றார். ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால் அதிமுக சார்பால ஓ பன்னீர் செல்வம் அல்லது எடப்பாடி பழனிசாமிதான் கலந்து கொள்ள முடியும். இதனால்  சி வி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் தங்கள் கட்சி சார்பான மனுவை அளித்துவிட்டு திரும்பியுள்ளார்.

இந்த கூட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகள் புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.