திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2023 (15:07 IST)

அரியலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி.. 30 பேர் படுகாயம்!

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து துறையூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் நோக்கி இன்று காலை தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. செந்துறை அடுத்துள்ள ராயம்புரம் என்ற பகுதியில் சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 20 வயது கல்லூரி மாணவர் கார்த்தி என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.